Belly Fat: வேகமா தொப்பை கொழுப்பை குறைக்க... இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்

Belly Fat Reduction Tips: இன்றைய காலத்தில் தொப்பை கொழுப்பு பிரச்சனை ஒரு பெரிய ஆபத்தான பிரச்சனையாக உள்ளது.

 

நாம் அறியாமலேயே நம் வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு அதை அகற்றுவது நம்மால் முடியாத காரியம் ஆகிவிடுகிறது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், கடினமான வழிகளை பின்பற்றினால்தான் உடல் எடையை (Weight Loss) குறைக்க முடியும் என்றில்லை. பல எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். மேல் தொப்பை கொழுப்பை குறைக்கும் இயற்கையான வழிகளை இந்த பதிவில் காணலாம்.

1 /8

நாம் அறியாமலேயே நம் வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு அதை அகற்றுவது நம்மால் முடியாத காரியம் ஆகிவிடுகிறது. 

2 /8

தொப்பையில் கொழுப்பு சேர்ந்தால், உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல வித உடல்நல பிரச்சனைகளும் இதனால் ஏற்படுகின்றன. 

3 /8

தொப்பை கொழுப்பு பிரச்சனையை தீர்க்க, கடினமான வழிகளைதான் பின்பற்ற வேண்டும் என்றில்லை. பல எளிய வழிகளிலும் நாம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.

4 /8

ஆரோக்கியமான உணவு ஃபிட்டான மற்றும் தட்டையான தொப்பையை (Belly Fat) பெற மிகவும் முக்கியமானது. அடிக்கடி சாப்பிடுங்கள், ஆனால் அதிக உணவை சாப்பிடுவதை தவிர்த்து அவ்வப்போது சிறிய அளவுகளில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம். 

5 /8

போதுமான அளவு தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால், பல வாழ்க்கை முறை நோய்கள் வராமல் தடுக்கலாம். சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்குப் பதிலாக, சாதாரண தண்ணீரைக் குடிக்கவும். இது நம் உடலை சுத்தப்படுத்தி, அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி, நம்மை நீரேற்றமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

6 /8

தூக்கமின்மை நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. தினமும் எட்டு மணிநேரம் நல்ல தரமான தூக்கம் அனைவருக்கும் தேவை. தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, எடை அதிகரிக்கவும் காரணமாகலாம்.

7 /8

கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும், தொப்பை கொழுப்பை போக்கவும் உடற்பயிற்சி சிறந்த வழியாகும்.  வாரத்தில் நான்கு நாட்கள் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியில் ஜிம், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆகியவற்றையும் செய்யலாம். 

8 /8

மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்கும். மன அழுத்தத்தை வெல்ல உதவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களுடன் கூடிய எளிய உணவுகள் பல உள்ளன.  உங்கள் மனநிலையை சீராக வைத்திருக்க ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.