இந்த வழிகளில் டெலீட் ஆனா புகைப்படங்களை திரும்ப பெறலாம்!

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்களை சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் மீட்டெடுக்கலாம்.

 

1 /5

உங்கள் மொபைலில் 'போட்டோஸ்' என்பதை திறந்து அதில் கீழே உள்ள லைப்ரரி எனும் மெனுவை திறக்க வேண்டும்.  

2 /5

அதன் பின்னர் மேலே உள்ள 'டிராஷ்' எனும் மெனுவை தேர்வு செய்ததும், மொபைலில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் திரையில் தெரியும்.    

3 /5

இப்போது 'ரீஸ்டோர்' என்பதை க்ளிக் செய்து புகைப்படத்தை மீட்டெடுக்க எத்தனை நாட்கள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.  இவை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சம்மந்தப்பட்டது அல்ல, கூகிள் போட்டோஸ் தொடர்புடையது.  

4 /5

அதன் பிறகு மேலே உள்ள 'செலக்ட்' எனும் ஆப்ஷனை தேர்வு செய்து ட்ராஷ் பகுதியிலுள்ள புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும்.  

5 /5

இப்போது நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் புகைப்படங்களை தேர்வு செய்து 'ரீஸ்டோர்' எனும் பட்டனை க்ளிக் செய்தவுடன் மொபைலில் இருந்து டெலீட் ஆன போட்டோக்கள் வந்துவிடும்.