No More 500 Rupees Rumors Please: 500 ரூபாய் நோட்டுகள் காணவில்லை என்று வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
அச்சிடப்பட்ட பணத் தாள்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறது, வதந்திகளை நம்பாதீர்கள், புரளிகளை பரப்பாதீர்கள் என்று விளக்கம் அளிக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி
அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தாள்கள் காணவில்லை என ஆர்.டிஐயில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது
சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய், சமூக ஊடகங்களில் இந்தத் தகவலை வெளியிட்டு, இதுகுறித்து விசாரிக்கக் கோரி மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்
ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அச்சம் எழுந்தது
500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போன அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்தது
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சேகரிக்கப்பட்ட தகவல்களின் "தவறான விளக்கத்தின்" அடிப்படையில் அறிக்கை இருப்பதாக ஆர்.பி.ஐ தெரிவித்தது
பணம் அச்சிடப்படும் அச்சகங்களில் இருந்து வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியில் சரியாகக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன
அச்சகங்களில் அச்சிடப்பட்டு, ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் ரூபாய் நோட்டுகளை கண்காணிக்க வலுவான அமைப்புகள் உள்ளன. அதில் ரூபாய் நோட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நெறிமுறைகளும் அடங்கும் என ஆர்.பி.ஐ விளக்கம் கொடுத்துள்ளது