குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு மே 1 முதல் அரச வாழ்க்கை ஆரம்பம்

Guru Peyarchi Palangal: வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதேபோல் தனுசு மற்றும் மீனத்தின் அதிபதி குரு ஆவார். அந்த வகையில் குரு கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

Guru Peyarchi Palangal: வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். காலபுருஷனுக்கு இரண்டாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்வதால் இந்த நிகழ்வு மிகப் பெரியது. எனவே குருவின் பார்வை பலன், அமைப்பால் சுப பலன்களை பெற உள்ள ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகள், முன்னேற்றங்கள் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை மாறுதல், வேலையில் முன்னேற்றம், புரமோஷன், சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

2 /13

ரிஷபம்: ரிஷபத்தில் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நிறைய பண வருமானம் வரும். சுப விரையங்களும் கிடைக்கும். முடங்கிய தொழில்கள் மீண்டு அதிக லாபம் தரும்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு அதிர்ஷ்டம் அள்ளும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல செய்திகள் கிடைக்கலாம். பொருளாதார நிலை முன்பு விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பண வரவு அதிகமாகும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்தும் ஆசைகளும் நிறைவேறும். வெளிநாடு செல்லலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு பணியிடத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். வாழ்க்கை துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல கால பிறக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். இருப்பினும் நிதி ஆதயமும் உண்டாகும். சரியான வழியில் திட்டமிட்டால் பணத்தை இரண்டு மடங்கு சேமிக்கலாம்.

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு அதிர்ஷ்டம் பெருகும். அனைத்த்திலும் வெற்றி காண்பீர்கள். தடைபட்ட வேலைகள் மேல் 1 ஆம் தேதிக்கு பிறகு வெற்றிகரமாக நடந்து முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு அதிகமாகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும், வியாபாரத்தில் லாபம் அதிகமாகும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்கலாம். மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.