ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் ஒரு வாரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வராத பட்சத்தில் மேலும் லட்சக்கணக்கானோர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நெருக்கடி குறித்த ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கள் துணை வலைத்தளமான WION-ன் படி, இந்த புகைப்படத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது, மார்ச் 1 ம் தேதி உக்ரைனில் உள்ள Zhytomyr இல் நடந்த ஒரு ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு ஒரு கட்டிடம் எரிந்த பின்னர், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்புப் படை ஊழியர்கள் இடிபாடுகளில் நடப்பதைக் காண முடிகிறது.
Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படம் பிப்ரவரி 28 அன்று உக்ரைனில் இருந்து ஸ்லோவாக்கியாவிற்குள் விஸ்னே நெமேக் எல்லையை கடக்க காத்திருக்கும் அகதிகளின் வாகனங்களைக் காட்டுகிறது.
இந்த செயற்கைக்கோள் படம் 28 பிப்ரவரி 2022 அன்று உக்ரைனின் செர்னிஹிவின் மேற்கு புறநகரில் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டிடத்தை காட்டுகிறது.
பிப்ரவரி 28 அன்று எடுக்கப்பட்டு மார்ச் 2 அன்று வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உக்ரைனின் செர்னிஹிவின் தென்மேற்குப் பகுதியில் இராணுவத் தொடரணியைக் காட்டுகின்றன.
இந்த செயற்கைக்கோள் படம், பிப்ரவரி 28 அன்று எடுக்கப்பட்டு, மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது. உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் நகரில் ஒரு சாலையில் சேதமடைந்த பாலம் மற்றும் அடுத்தடுத்த வீடுகளை இது காட்டுகிறது.