SBI Floating ATM: நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி தனித்துவமான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. SBI, ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் ஒரு படகுவீட்டில் (House Boat) ஏடிஎம்-ஐ திறந்துள்ளது.
இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பணம் தேவைப்பட்டால், இந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்ரீநகர் மக்களுக்கு எஸ்பிஐ மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 16 அன்று, ஸ்ரீநகரின் புகழ்பெற்ற டால் ஏரியில் உள்ள படகு வீட்டில் எஸ்பிஐ, ஏடிஎம் -ஐ திறந்தது. இதை எஸ்பிஐ தலைவர் தினேஷ் கரே திறந்து வைத்தார்.
இந்த மிதக்கும் ஏடிஎம்கள் இப்போது சுற்றுலாப் பயணிகளின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது.
இந்த தனித்துவமான முயற்சி குறித்து எஸ்பிஐ ஒரு ட்வீட் செய்துள்ளது. "உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எஸ்பிஐ ஸ்ரீநகரில் உள்ள #DalLake-ல் ஹவுஸ் போட்டில் ஏடிஎம் -ஐத் திறந்தது. ஆகஸ்ட் 16 -ம் தேதி எஸ்பிஐ தலைவர் இதைத் திறந்து வைத்தார். பிரபலமான டால் ஏரியில் உள்ள #FloatingATM நீண்டகால தேவையை பூர்த்தி செய்கிறது. இது ஸ்ரீநகரின் அழகிற்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கும்." என்று SBI ட்வீட் செய்துள்ளது.
இதற்கு முன், SBI 2004 ஆம் ஆண்டில் கேரளாவிலும் மிதக்கும் ஏடிஎம்-ஐத் தொடங்கியது. இந்த மிதக்கும் ஏடிஎம் கேரளாவின் KSINC-வின் 'ஜங்கர் படகு'-ல் திறக்கப்பட்டது.
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது. எஸ்பிஐ இடம் அதிகபட்சமாக 22,224 வங்கி கிளைகளும் 3,906 ஏடிஎம்-களும் உள்ளன.