அனுஷ்கா சர்மாவின் அழகின் பின் இருக்கும் ரகசியம் என்ன...? பியூட்டி டிப்ஸ் இதோ!

பிரபல பாலிவுட் நடிகையும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பளபளக்கும் தனது சருமத்திற்கு பின்னுள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறத்து இதில் விரிவாக காணலாம்.

  • Jun 26, 2024, 17:55 PM IST

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சமமாகும். எனவே, சரும ஆரோக்கியத்தில் ஒருவர் அலட்சியம் காட்டக்கூடாது. 

 

1 /8

அனுஷ்கா சர்மாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து அவர் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல தகவல்களை பகிர்ந்து வந்தார். அந்த வகையில், சில நாள்களுக்கு முன்னர் அவர் தனது பளபளக்கும் சருமத்திற்கு பின்னிருக்கும் ரகசியத்தை (?!) பகிர்ந்துகொண்டார்.  

2 /8

பாலிவுட் நடிகையும், உலகளவில் மிக பிரபலமானவருமான அனுஷ்கா அவரின் எளிமையான தோற்றம், உடை மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு பெயர் பெற்றவர். அந்த வகையில், அவரின் பியூட்டி டிப்ஸை பயன்படுத்துவது நிச்சயம் பலருக்கும் பலனளிக்கும்.   

3 /8

சருமம் மற்றும் அழகின் ரகசியம் குறித்து அவர் கூறுகையில், எவ்வித பியூட்டி தயாரிப்புகளும் இன்றி இயற்கையாகவே பளபளப்பான சருமத்தை பெற்றதாக தெரிவித்தார். சருமத்திற்கு என சிறப்பான எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.   

4 /8

சருமம் ஜொலி ஜொலிக்க ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கமும் ஒரு காரணமாகும். கார்போஹைட்ரேட்ஸ், புரதம் உள்ளிட்ட சமமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்கிறாராம். பழங்கள் மற்றும் காய்கறிகள் என ஆரோக்கியமான உணவே பளபளப்பான சருமத்திற்கு மற்றொரு காரணம் என்கிறார்...  

5 /8

குறிப்பாக, பழங்கள் உடலுக்கும் மற்றும் சருமத்திற்கும் நல்லது என அவர் குறிப்பிடுகிறார். அவர் வாழைப்பழத்துடன் தேன், பால் கலந்து தனது முகத்திற்கு Face Pack தனக்கு தானே போட்டுக்கொள்வாராம். ஆம், பழங்களில் வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் அதிகம் இருப்பதால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.  

6 /8

அனுஷ்கா சர்மா தேங்காய் எண்ணெயை தான் முகத்தில் தேய்த்துக்கொள்வாராம். தேங்காய் எண்ணெய்யும் அவரின் இயற்கையான அழகிற்கு முக்கியமானதாக குறிப்பிடுகிறார்.   

7 /8

மேலும் அவர் பொதுவெளியில் தற்போதெல்லாம் பெரியளவில் மேக்அப் உடன் வருவதில்லை. மிக எளிமையான மற்றும் இயற்கையான தோற்றத்திலேயே காணப்படுகிறார். முன்னர் சொன்னதுபோல் தனக்கு தானே Face Pack போட்டுக்கொள்வது, சன்ஸ்கிரீன் உள்ளிட்ட சில விஷயங்களை மட்டும் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தவதாகவும் தெரிவித்தார்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அனுஷ்கா சர்மாவின் பியூட்டி டிப்ஸ் ஆகும். இதனை நீங்கள் பயன்படுத்தும் முன் நிச்சயம் மருத்துவ வல்லுநரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதற்கு Zee News பொறுப்பேற்காது.