முகப்பரு முழுசா போகணுமா: இப்படி செஞ்சி பாருங்க

பருக்களுக்கான வீட்டு வைத்தியம்: பருக்கள் இருப்பதால், முகத்தில் புள்ளிகள் ஏற்படுகின்றன. இது முகத்தின் அழகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையும் மாசுபாடும் பருக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இது தவிர, எண்ணெய் பசை சருமம் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களும் பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கலாம். பருக்களால் சிரமப்படுபவர்களுக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

எலுமிச்சையை உட்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் இது பருக்கள் பிரச்சனைக்கும் தீர்வாய் அமைகிறது. எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இரவில் தூங்கும் போது பஞ்சு கொண்டு எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் பருக்களையும் குறைக்கும்.

2 /5

தேன் எலுமிச்சை போன்ற பல பண்புகளை கொண்டுள்ளது. இது ஒரு இயற்கை கிருமி நாசினியாக கருதப்படுகிறது. பருக்களை நீக்கவும் பயன்படுகிறது. பருக்கள் மீது தேன் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விடவும். உலர்த்திய பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

3 /5

பற்களை சுத்தம் செய்ய பற்பசை பயன்படுத்தப்பட்டாலும், பருக்கள் மறையவும் இவை பயன்படுகின்றன. இரவில் தூங்கும் முன், பருக்கள் உள்ள இடத்தில் பற்பசையை தடவி, காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது பருக்களை அகற்ற உதவும். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு வெள்ளை பற்பசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4 /5

வெள்ளரிக்காயை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கின்றது. இது மட்டுமல்லாமல், அதன் பேஸ்ட்டை முகத்தில் தடவுவதால் சருமம் சுத்தமாகும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது பருக்களை நீக்கும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்ய வேண்டும்.

5 /5

துளசி இலைகளை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு, இந்த தண்ணீரை உங்கள் முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் உங்கள் முகத்தை கழுவிய பின் அதன் விளைவைப் பாருங்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)