OOTY TRAIN: நீலகிரி மலையில் தெற்கு ரயில்வேயின் முதல் நீராவி என்ஜின்

காலம் பின்னோக்கி செல்லலாம் என்று நினைத்ததுண்டா? இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தெற்கு ரயில்வே, காலத்தின் அனுபவத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொடுக்கிறது. 

உண்மைதான், தெற்கு ரயில்வே நீராவி இயந்திரத்தை உருவாக்கி அதையும் இயக்கப் போகிறது. ரயில்வேயின் இந்த முயற்சி, நீராவி இயந்திரத்தின் அழகிய சகாப்தத்தை மீண்டும் துவங்கும் ஒரு அற்புதமானத் தருணம்…

Also Read | Queen of hills மலை ரயிலில் பயணிப்போமா?

1 /5

தெற்கு ரயில்வே (Southern Railway) பிரிவின் கீழ் வரும் இந்திய ரயில்வேயின் கோல்டன் ராக் பட்டறை (Golden Rock Workshop), சமீபத்தில் நாட்டில் முதல் முறையாக எக்ஸ்-கிளாஸ் நீராவி என்ஜின் தயாரித்துள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை ரயில்வேயில் (Nilgiri Mountain Railway) நீராவி என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.

2 /5

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை ரயில் பாதை (Nilgiri Mountain Railway) மேட்டுப்பாளையம்  முதல் உதகமண்டலம் (ஊட்டி) வரை நீண்டுள்ளது. நீலகிரியின் பரந்த பசுமையான இடங்களை பார்த்து ரசித்துக் கொண்டே மக்கள் மலைரயிலில் பயணிக்கலாம்.  

3 /5

இந்த செய்தியை ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்துள்ளது, "நீராவி சகாப்தத்தைத் திரும்பிப் பாருங்கள்! இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள முதன்மையான பட்டறை, கோல்டன் ராக் பட்டறை, முதல் உள்நாட்டு நிலக்கரி நீராவி என்ஜின்-'பிளாக் பியூட்டி' (X-37400) எஞ்சினை தயாரித்துள்ளது.

4 /5

நீராவி எஞ்சினின் மொத்த நீளம் 10,380 மிமீ; உயரம் 3,420 மிமீ ஆகும். நீலகிரியின் மலைப்பாங்கான நிலப்பரப்பை மனதில் வைத்து, இந்த இன்ஜினில் டைனமிக், பேண்ட் பிரேக் மற்றும் வெற்றிட பிரேக் சிஸ்டம் (dynamic, band brake and vacuum brake system) பொருத்தப்பட்டுள்ளது.

5 /5

கோல்டன் ராக் பட்டறை IOT அடிப்படையிலான நிபந்தனை கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது, இது இப்போது திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரேக் மற்றும் LHB பவர் காரில் இயங்கும் 3 அடுக்கு ஏசி கோச்சில் நிறுவப்பட்டுள்ளது. ஐசிஎஃப் கோச்சுகளின் கதவுகள் மற்றும் கேங்க்வேக்களில் புதிதாக உருவாக்கப்பட்ட எபோக்சி தளம், ஐசிஎஃப் ஸ்லீப்பர் கோச்சுகளில் நீளமான கீழ் பெர்த்துகளில் அறிமுகமாகும். என்எம்ஆர் கோச்சுகளில் பிவிசி பூசப்பட்ட ஜிஐ ஷீட் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.