குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடீஸ்வர வாழ்க்கை

Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றில் சனியின் பெயர்ச்சிக்கும் குருவின் பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுவார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

சுப கிரகமாக கருதப்படும் குரு பலவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவர் குழந்தைகள், திருமண வாழ்க்கை, கல்வி, செல்வம், அதிர்ஷ்டம், அறிவாற்றின் காரணி கிரகமாவார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறுகிறார்.

2 /9

குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

3 /9

மேஷம்: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். இதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி பெற பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். இவர்களின் வருமானமும், சேமிப்பும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், திருமணம் அல்லது குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் வரலாம். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும்.

4 /9

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். தொழில் வழியில் இருந்து வந்த பிரச்சனைகளும் நீங்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் தைரியம் அதிகரிக்கும், உங்கள் முடிவெடுக்கும் திறன் வலுவாக இருக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலையும் மேம்படும். 

5 /9

மிதுனம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி நிலை நன்றாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எளிதாக வெளிவருவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

6 /9

கடகம்: குரு பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், கடக ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.  தொழில் தொடங்கும் நாட்டம் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை தொடங்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

7 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன்களை பெறவுள்ளனர். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் விருப்பப்படி வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பரிமாணம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரும் வருமானம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

8 /9

கன்னி: கன்னி ராசிக்காரர்களும் 2024 குரு பெயர்ச்சி பெரிய அளவிலான நல்ல பலன்களை அளிக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலைகளையும் தொடங்கலாம். பண வரவு அதிகமாகும்.   

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.