கன்னி ராசியில் சூரியன்; எந்த ராசிகளுக்கு சூப்பர்; எந்த ராசிகளுக்கு சுமார்... பலன்கள் இதோ!

சூரியன் பெயர்ச்சி பலன்: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கப் போகிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி, சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். 16 அக்டோபர் 2022 வரை சூரிய பகவான் இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். சூரிய ராசியில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும் என ஜோதிட கணக்கீடுகள் கூறுகின்றன.

1 /12

மேஷம் - சூரியன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் நிறைவடையும். இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

2 /12

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தின் போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள்.

3 /12

மிதுனம் - சூரியனின் ராசி மாற்றத்திற்குப் பிறகு, மிதுன ராசிக்காரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

4 /12

கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு சூரிய ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவுகள் இருக்கும்.

5 /12

சிம்மம் - சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே, இந்த காலகட்டத்தில் கவனமாக முடிவுகளை எடுங்கள். நீங்கள் நிதி தொடர்பான விஷயங்களில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

6 /12

கன்னி - சூரியன் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு போதுமான வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இருப்பினும், செலவுகள் அதிகரிக்கும்.

7 /12

துலாம் - சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சூரிய பகவானின் அருளால் நல்ல செய்தி கிடைக்கும்.

8 /12

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களின் இந்தக் காலத்தில் வருமானம் பெருகும். பண பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

9 /12

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி புதிய வாய்ப்புகளைத் தரும். வியாபாரிகளின் வியாபாரம் வேகம் பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

10 /12

மகரம் - சூரியனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சற்று தொந்தரவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். மன உளைச்சல் இருக்கலாம்.

11 /12

கும்பம் - சூரியன் ராசி மாற்றத்தின் தாக்கத்தால் நிதி வாழ்க்கை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். துணையின் ஆரோக்கியம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம்.

12 /12

மீனம் - மீன ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தின் போது புதிய வாய்ப்புகளைப் பெறலாம். முதலீடு செய்த பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் வரலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )