T20 World Cup 2022: உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் சந்திக்கவுள்ளன
வியாழன் அன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் சிறப்பானதாக இருக்கும்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டனும் பேட்ஸ்மேனுமான விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மற்ற வீரர்கள் தவிர அவர்களது குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
பிரிட்டிஷ் ராஜ் என்ற உணவகத்தில் இந்த இரவு விருந்து நடைபெற்றது. இந்த உணவகம் இந்திய உணவுகளையும் வழங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 7ஆம் தேதி அடிலெய்டு சென்றடைந்தது. திங்கள்கிழமை நாள் முழுவதும் ஓய்வெடுத்த பிறகு, சில வீரர்கள் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரவு விருந்திற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அணி பேருந்தை கடந்து செல்லும்போது உற்சாகமாக காணப்பட்டனர். வியாழன் அன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் சிறப்பானதாக இருக்கும்.