Aadhaar Card: ஆதார் அட்டை தவறாக பயன்படுத்துவதை தடுக்க செய்ய வேண்டியவை

ஆதார் அட்டை என்பது நாட்டில் மிக முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாகும். நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்த ஆவணம் தேவைப்படுவதால் ஆதார் மூலம் மோசடி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

1 /7

உங்கள் ஆதார் OTP-யை யாருடனும் பகிர வேண்டாம். ஃபோன், எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் ஆதாருக்கு ஒருபோதும் OTP தேவையில்லை என்று UIDAI ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

2 /7

மொபைல் எண்-ஆதார் இணைப்பு: உங்கள் ஆதார் அட்டையின் பாதுகாப்பிற்காக உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். நீங்கள் புதிய தொலைபேசி எண்ணை பெற்றிருந்தால், அது உடனடியாக உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். 

3 /7

ஆதாரை வெர்பை செய்யவும்:  ஆதார் அட்டைகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சரிபார்க்கலாம். பயனர்கள் தங்கள் இ-ஆதார், ஆதார் கடிதம் அல்லது ஆதார் பிவிசி கார்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆஃப்லைனில் சரி பார்க்கலாம். ஆன்லைன் சரிபார்ப்புக்கு பயனர்கள் https: // myaadhaar அல்லது uidai.gov.in என்ற வலைதளத்தை அணுகலாம்.  

4 /7

m-Aadhaar: ஆதார் தொடர்பான தகவல் மற்றும் பல அம்சங்களைப் பெற, m-Aadhaar பயன்பாட்டை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கவும். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கிய பிறகு, யாரும் யூகிக்க முடியாத சக்திவாய்ந்த நான்கு இலக்க கடவுச்சொல்லை உருவாக்கவும்.

5 /7

ஆதார் பயோமெட்ரிக் லாக்: யுஐடிஏஐ, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டையை பயோமெட்ரிக்ஸ் லாக் செய்ய அனுமதிக்கிறது, அதனால் அவர்களின் அட்டையை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்த முடியாது.

6 /7

பலர் பயன்படுத்தும் பொது கணினியில் இருந்து ஆதார் அட்டையை பதிவிறக்க வேண்டாம். கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேறு ஏதேனும் பிரதிகள் இருந்தால், அவற்றை கவனமாக அகற்றவும்.

7 /7

UIDAI இணையதளத்தில் இருந்து ஆதார் கார்டைப் பதிவிறக்கவும். உங்கள் ஆதார் அட்டையை வேறு எந்த இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் கவனமாக இருங்கள். UIDAI  அதிகாரப்பூர்வ இணையதளத்தை எப்போதும் பயன்படுத்தவும்.