தங்கலான், ரகு தாத்தா, டிமாண்டி காலனி 2 -ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்! எது நல்லாயிருக்கு?

Tamil Movies Released On August 15th: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரே நாளில் 3 தமிழ் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

Tamil Movies Released On August 15th: விடுமுறை தினங்களை குறிவைத்து பல படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் ரசிகர்கல் அதிகம் எதிர்பார்த்த 3 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில், கோலிவுட்டில் கவனம் ஈர்த்த ஸ்டார் நடிகர்கள் நடித்திருக்கின்றனர். தமிழில் மட்டுமன்றி வேறு மொழியிலும் கூட சில படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில், எந்த படத்திற்கு என்ன விமர்சனம் வந்திருக்கிறது என்பதையும், எதை முதலில் பார்க்கலாம் என்பது குறித்தும் இங்கு காண்போம். 

1 /8

ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியிருக்கும் தமிழ் படங்கள். இதில், எதை முதலில் பார்க்கலாம்? 

2 /8

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இதில், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

3 /8

தற்போது வரை தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

4 /8

கீர்த்தி சுரேஷ் நடிப்பி, சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ரகு தாத்தா. இந்த படத்தில் கீர்த்தியுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். 

5 /8

பெண்ணியம் பேசினாலும், மொழி திணிப்பு பற்றி பேசினாலும், பெரியாரிசம் பேசினாலும் அதை சொல்லும் விதத்தில் சொன்னால்தான் சரியாக ரசிகர்களை சென்றடையும். அதை, இந்த படம் செய்ய தவறி இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

6 /8

டிமாண்டி காலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதை, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது. 

7 /8

டிமாண்டி காலனி 2 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் சுமாரான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். முந்தைய படத்தின் கதை போலவே இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். மொத்தத்தில், அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் சுமார் என்ற விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். 

8 /8

பிற மொழி படங்கள்: இந்தியில் ஸ்ட்ரீ 2 படமும் தெலுங்கும் டபுள் இஸ்மார்ட் மற்றும் மிஸ்டர் பச்சன் ஆகிய படங்களும் வெளியாகியிருக்கின்றன.