குபேரருக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: பண மழையில் நனைவார்கள்.. உங்க ராசி என்ன?

Lord Kuber Favorite Zodiac Signs: ஜோதிடத்தின்படி, செல்வத்தின் கடவுளான குபேரரின் அருள் அனைவருக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அவரது அருள் இருந்தால், அந்த நபர் வாழ்நாள் முழுதும் செல்வச்செழிப்பில் இருக்கிறார். 

 

குபேரர் தன்னுடைய அருளை அனைத்து ராசிகளுக்கும் வழங்குகிறார். எனினும், இவற்றில் சில ராசிகள் மீது அவர் கூடுதல் கனிவுடன் இருக்கிறார். இவர்கள் அவருக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /7

குபேரருக்கு பிடித்தமான நான்கு ராசிகள் உள்ளன. அவர்கள் மீது அவரது அருட்பார்வை எப்போதும் இருக்கும். குபேரரின் அருளால் அவர்களது வாழ்வில் ஒருபோதும் பணப் பற்றாக்குறையை உணர மாட்டார்கள். அவர்கள் அதிக அளவில் பணம் சம்பாதிப்பார்கள். 

2 /7

ரிஷபம்: குபேரனின் அருளால் ரிஷபம் ராசிக்காரர்கள் சகல உலக இன்பங்களையும் அடைவதில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களது தேவைகள் அனைத்தையும் குபேரர் நிறைவேற்றுகிறார். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் பொருள் வசதிகள், பெருமை, புகழ், மரியாதை, செல்வம் போன்றவற்றுக்கு காரணியாக உள்ளார். 

3 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் தாங்கள் செய்ய நினைக்கும் வேலையை முடித்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விடும் இயல்புடையவர்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால் செல்வந்தர்களாக மாறுவார்கள். குபேரர் எப்பொழுதும் துலாம் ராசியினரிடம் அன்பாக இருப்பார்.

4 /7

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தெய்வங்களின் பொருளாளராகக் கருதப்படும் குபேரனின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்ல நிலையை அடைவார்கள்.

5 /7

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் வேலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். தங்கள் கடின உழைப்பால், சூழ்நிலைகளை மாற்றியமைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். குபேரரின் அருளால், இவர்களுக்கு எப்போதும் பணப்பற்றாக்குறை இருப்பதில்லை. 

6 /7

குபேரரை மகிழ்விக்க தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் ஏதேனும் ஒரு உலோகத்தில் குபேர யந்திரத்தை பொறிக்க வேண்டும். அல்லது சந்தையில் இருந்து குபேர யந்திரத்தைக் கொண்டு வந்து முறையாக நிறுவி தினமும் வழிபடுங்கள். இதனால் வீட்டில் குபேரரின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.