உலக பணக்காரர்களின் ராசிகள் இவைதான்: உங்க ராசியும் இதுதானா?

உலகப் பணக்காரர்கள் மீது அனைவரது கவனமும் இருக்கிறது. அவர்களது ஆடம்பர வாழ்க்கை முறை, ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த கார்கள், படகுகள், தீவுகள் என எப்போதும் மக்களின் கவனத்தை இவை ஈர்க்கின்றன. இவர்களைப் பார்த்து நாமும் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வருகிறது. இந்த உலகப் பணக்காரர்கள் எந்த ராசியில் பிறந்திருப்பார்கள்? நாமும் அதில் பிறந்திருந்தால், அவர்களைப் போல் பணக்காரர்களாக முடியுமா? இப்படி பல கேள்விகள் நம்மில் எழும். இந்த பதிவில் உலகின் சில முக்கிய பணக்காரர்களின் ராசிகளைப் பற்றி பார்க்கலாம். 

 

1 /5

உலகின் மிகவும் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், சமீபத்தில் தனது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தது குறித்து தலைப்புச்செய்திகளில் அதிகம் இடம் பெற்றார். பில் கேட்ஸின் ராசி விருச்சிகம் ஆகும். அறிக்கைகளின் படி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு சுமார் $137 பில்லியன் ஆகும்.

2 /5

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் ராசி கடகம். இவர் $278 பில்லியன் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்.

3 /5

உலகின் மிகப் பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ராசி மகரம். அவருக்கு சுமார் 202 பில்லியன் டாலர் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.

4 /5

உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் ராசி ரிஷபம். அறிக்கைகளின்படி, அவர் சுமார் 121 பில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளர்.  

5 /5

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரும் உலகின் பில்லியனர்களில் உள்ளனர். அவர்களின் சொத்துக்கள் முறையே $131 பில்லியன் மற்றும் $126 பில்லியன் ஆகும். லாரி பேஜின் ராசி மேஷம். செர்ஜி பிரின் ராசி சிம்மம் ஆகும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)