நாம் என்றென்றும் இளமையாக இருப்பதில் சில உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அதனால் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
புரோட்டின் உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து, போதுமான அளவு நீங்கள் புரோட்டின் உணவுகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் சீக்கிரமாக முதுமை தோற்றத்தை அடைந்து விடுவீர்கள், மேலும் இது சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடும்.
செயற்கையாக சுவையூட்டப்பட்ட இனிப்பு பொருட்கள் மற்றும் அதிக இனிப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் சாப்பிட்டால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
நார்சத்து நிறைந்த பொருட்கள் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கிறது, இதனை உணவில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் முதுமை தோற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல, தினமும் சாப்பிடுவது எளிதில் முதுமை தோற்றத்தை அளிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனிப்பு கிழங்குகள், கேரட்டுகள், போன்ற காய்கறிகளை அதிக சாப்பிட வேண்டும், இதிலுள்ள பீட்டா கரோட்டின் உங்களது நீரேற்றமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.