ICC World Cup 2023: இதுவரை உலகக் கோப்பையின் 12 பதிப்பு நடைபெற்றுள்ளது. இதில், இதுவரை பல சதங்கள் அடிக்கப்பட்டிருந்தாலும், அதிவேகமாக சதம் அடிப்பதும் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
உலகக் கோப்பை என்றாலே சாதனைகள் முறியடிக்கப்பட்டு, புதிய சாதனைகள் படைக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். அந்த வகையில், இலங்கை அணிக்காக இன்றைய போட்டியிலும் பல சாதனைகள் படைக்கப்பட்டன.
இருப்பினும், அதில் மார்க்ரம் அதிவேக சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
எய்டன் மார்க்ரம்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் (அக். 7) 49 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
கெவின் ஓ பிரையன்: 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறார்.
கிளென் மேக்ஸ்வெல்: 2015ஆண் ஆண்டு உலகக் கோப்பையில் சிட்னியில் இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 51 பந்துகளில் சதம் அடித்திருந்தார். இந்த பட்டியலில் இவர் 3ஆம் இடத்தை பிடிக்கிறார்.
ஏபி டி வில்லியர்ஸ்: இவர் 2015இல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 52 பந்துகளில் சதமடித்ததன் மூலம் இதில் நான்காவது இடத்தில் உள்ளார்.
இயான் மார்க்ரம்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 57 பந்துகளில் சதமடித்து இதில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறார்.