இந்த உலகக் கோப்பையின் டாப் 5 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்தான்... லிஸ்டில் 2 இந்தியர்கள்

ICC World Cup: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பவர்களில் மிகவும் பணக்கார 5 வீரர்களையும், அவர்களின் சொத்து மதிப்பையும் இங்கு காணலாம். 

Top 5 Richest Players In World Cup 2023: இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் கிரிக்கெட் அதிக வருவாயை தருகின்றது. அந்த வகையில், இந்த பட்டியலில் மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும், இரண்டு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். 

 

 

 

1 /7

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் 13ஆவது தொடர் இந்தியாவில் வரும் அக். 5ஆம் தேதி தொடங்கி, நவ. 19ஆம் தேதி வரை என மொத்தம் 45 நாள்கள் நடைபெற உள்ளது.

2 /7

10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும் நிலையில், ஒவ்வொரு அணிக்கும் தலா 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்த தொடரில் விளையாடும் 150 வீரர்களில் மிக பணக்காரர்களான 5 வீரர்களை இதில் காணலாம்.   

3 /7

Mitchell Starc: ஆஸ்திரேலிய அணியின் இடது வேகப்பந்துவீச்சாளரும், நட்சத்திர வீரருமான மிட்செல் ஸ்டார்க்கின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இவர் இந்த பட்டியலில் கடைசி இடமான 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.   

4 /7

Steve Smith: இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்தை பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என மதிப்பிடப்படுகிறது. 

5 /7

Rohit Sharma: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் சுமார் ரூ. 120 கோடி அளவிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார். 

6 /7

Pat Cummins: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடி என கணக்கிடப்படுகிறது. 

7 /7

Virat Kohli: விராட் கோலி இந்த உலகக் கோப்பையிலேயே விளையாடும் பணக்கார வீரர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 950 கோடி என கூறப்படுகிறது.