வாரத்தில் 4 நாள் மட்டும் இந்த 6 உணவுகளை சாப்பிட்டால் போதும்! ஆரோக்கியம் உங்க வசம்!

Do Not Miss Dietary Superstars: உணவே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. நாம் உண்ணும் உணவே நமது வாழ்க்கையின் நிம்மதியை தீர்மானிக்கிறது. உங்கள் உணவில் இடம் பெறத் தகுதியான உணவுகளின் பட்டியலில் இந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?

ஆரோக்கியமான உணவு மற்றும் உணவைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுகிறோம், ஆனால் நாம் தவறவிடும் ஊட்டச்சத்து உணவுகளின் எண்ணிக்கை பல. ஆனால், தவிர்க்கவே கூடாத சில சத்தான உணவுகள் இவை...

1 /9

நாம் உண்ணும் உணவின் தன்மை, தரம் மற்றும் அளவைப் பொறுத்து நமது உடல் இயக்கங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. நாம் உண்ணும் உணவே மருந்தாக செயல்பட்டு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்

2 /9

ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை நமது உயிரணுக்களுக்கு வழங்குபவை. வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் ,கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றுள்ளப் பொருட்களை, ஊட்டச்சத்து நிறைந்தவை என்று கூறலாம்

3 /9

அபாரமான ஊட்டச்சத்து சக்திகளை கொண்டுள்ள பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றங்கள் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட வேண்டாம்

4 /9

பெபிடாஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள், ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாகும். மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள பூசணி விதைகள், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும்

5 /9

தாவர அடிப்படையிலான புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு அத்தியாவசிய தாதுக்களின் சிறந்த மூலமான பருப்பு வகைகளில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன, இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.

6 /9

கடுகு சிறித்தாலும் காரம் பெரியது என்று சொல்வதைப் போல, அளவில் சிறிதாக இருந்தாலும், சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து நிறைந்துள்ள சியாவைதைகளை தண்ணீரில் ஊறவைத்தால் ஜெல் போல மாறிவிடும். அதை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தினால், ஆரோக்கியம் மேம்படும்  

7 /9

மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன, அவை இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியம். வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் அருமையான மூலமான மத்தி மீன்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானவை ஆகும்

8 /9

புளித்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் கெஃபிர் புரோபயாடிக் சூப்பர்ஸ்டார் ஆகும். கெஃபிரில் பல்வேறு வகையான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன, அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக இந்த கெஃபிர் உள்ளது.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை