Benefits of Cucumber: வெள்ளரிக்காய் கோடைக்காலத்திற்கான மிகச்சிறந்த காயாகும். இந்த காலத்தில் இது சந்தையில் ஏராளமாக கிடைக்கிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. வைட்டமின் ஏ, சி, கே, பொட்டாசியம், லுடீன், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின்-கே மிக அதிக அளவில் உள்ளது. இதனால் எலும்பின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.
வெள்ளரிக்காய் தோல் மற்றும் நமது கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதிலிருந்து விடுபடலாம். இதனுடன், இது வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஏனெனில் வெள்ளரியில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. இது தவிர, வெள்ளரிக்காயால் எடை அதிகரிப்பு ஏற்படாது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால், அதைச் சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பியிருப்பதோடு, வீணாக எதையும் சாப்பிடவும் தோன்றாது. இதனால், வீண் எடை அதிகரிப்பு தவிர்க்கப்படும்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சாதாரணமாக, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.