Benefits of Cumin Seeds Water: நாம் நமது தினசரி சமையலில் பயன்படுத்தும் மசாலா வகைகள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இவற்றில் உள்ள பல வித ஆரோக்கிய நன்மைகள் நம்மை பல வழிகளில் காக்கின்றன.
Benefits of Cumin Seeds Water: நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் சீரகமும் ஒன்று. சீரகத்தின் பெயரிலேயே அதன் குணம் வெளிபப்டுகின்றது. சீரகம் என்றால் 'சீர்-அகம்' என்று பொருள். அகமாகிய நம் உடலை சீர்செய்யும் பணியை அது செய்கிறது. சீரகம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய உணவிலும் சேர்க்கப்படும் ஒரு மசாலாவாக உள்ளது. இரும்புச்சத்து, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், ஜிங்க் மற்றும் மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் சீரகத்தை உட்கொள்வதன் நன்மைகளை பற்றி காணலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் சீரகத்தை உட்கொள்ளலாம். இதில் உள்ள பண்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் படிப்படியாகக் குறைக்கின்றது. இதன் மூலம் இதய நோய்களுக்கான ஆபத்து குறைகிறது.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தினமும் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்ள வேண்டும். இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் (Constipation) தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கின்றது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் சீரகம் உதவுகிறது. சீரகத்தில் இடம்பித்திருக்கும் பாலிபீனால் என்கிற சேர்மானம் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.
இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் பண்புகள் சீரகத்தில் உள்ளன. ஆகையால் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. சீரகம் டைப் 2ம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சீரகத்தை உட்கொள்ளலாம். சீரகம் பசியைக் குறைத்து, நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது நீர் தேக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு வேகமாக குறைகிறது. இதில் மிக குறைவான கலோரிகளே இருப்பதால், இதனால் உடல் எடை வேகமாக குறைகிறது.
சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைலள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவகால நோய்களிலிருந்து நம்மை காக்கின்றன.
தினமும் காலையில் வெதுவெதுப்பான சீரக நீர் குடித்து வந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் மேம்படும். இது மட்டுமின்றி இது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.