இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையளர் நன்மைக்காக அவ்வபோது பல புதிய மலிவு விலைத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இவற்றால் வாடிகையாளர்களுக்கு அதிக தரவும், அழைப்பு வசதியும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு புதிய சலுகைகளை வழங்க உள்ளது. புதிய திட்டங்களில் அதிரடியான மலிவு விலையில், அதிகப்படியான தரவு, இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கின்றன.
ஒரு நம்ப முடியாத திட்டத்தில், Vi 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்கு ஒரு நாளைக்கு ரூ .11 க்கும் குறைவாகவே செலவிட்டால் போதும். Vodafone Idea இந்த அதிரடியான ரூ .299 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ .299 திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒட்டுமொத்தமாக, Vi இந்த திட்டத்துடன் 112 ஜிபி அதிவேக தரவை (High Speed Data) வழங்குகிறது.
திட்டத்தின் நாளொன்றுக்கான விலையை கணக்கிட்டால், வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ .11 க்கும் குறைவாகவே செலவிட வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து நன்மைகளையும் தவிர, இந்த திட்டம் Binge All Night வசதியையும் வழங்குகிறது. Binge All Night சலுகையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.
வார இறுதி தரவு மாற்றம் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு இலவச சந்தா போன்ற பிற அம்சங்களும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. இதற்கிடையில், 56 நாட்கள் செல்லுபடியாகும் விதமாக ரூ 399 க்கான ஒரு சிறப்பு திட்டத்தையும் Vi அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றின் நன்மைகள் கிடைக்கும்.
Binge All Night, வார இறுதி தரவு மாற்றம் மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கு இலவச சந்தா ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் கூடுதலாக பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன் செய்யும் அடுத்த ரீசார்ஜில் ரூ .40 தள்ளுபடி கூப்பனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.