'லியோ' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கெட்டப் இதுதானா?

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், தற்போது  அவரின் டெஸ்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

 

1 /5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.  

2 /5

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் கலந்துகொள்கிறார்.  அங்கு அவருக்கு ஒரு லுக் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது, அதில் வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் ஹீரோ போல காட்சியளிக்கிறார்.  

3 /5

தளபதி விஜய்யுடன் முதன்முறையாக 'லியோ' படத்தில் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார்.  மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் நடித்திருக்கிறார்.  

4 /5

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதியன்று உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.  

5 /5

'லியோ' படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.