Dussehra Fire 2022: ராவணனை எரித்த விஜயதசமி கொண்டாட்டங்கள்

Vijaya Dashami 2022: தீமையை எதிர்த்து வெற்றி பெறும் ராவண தகன நிகழ்வு. தசராவை கொண்டாடும் இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தின் நவீன புகைப்படங்கள்..  

விஜய தசமி கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகள், பாரம்பரிய பின்னணி கொண்ட இந்தியாவில் இடத்திற்கு ஏற்ப மாறுபட்டாலும், இந்தத் திருவிழா முழு நாட்டையும் ஒற்றைக் கண்ணியால் இணைக்கிறது.  

மேலும் படிக்க | துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

1 /5

அக்டோபர் 5ம் தேதியான நேற்று, நாடு முழுவதும் ராவணனின் பல உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு தசரா கொண்டாடப்பட்டது. துர்கா பூஜை திருவிழாவின் நிறைவு நாள் தசமி கொண்டாட்டங்கள்   (புகைப்படம்:PTI)

2 /5

தசரா அன்று, பெரிய கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ராவணன் தகனத்தைக் காண மக்கள் பெருமளவில் கூடினார்கள் (புகைப்படம்: ANI)

3 /5

ஒன்பது நாட்கள் நீடித்த நவராத்திரி திருவிழா, விஜயதசமி அன்று முடிவடைந்தது. லே, லூதியானா, டேராடூன், பாட்னா மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரித்து தசரா பண்டிகையை மக்கள் கொண்டாடினர். (புகைப்படம்: ANI)

4 /5

தசரா சாரதா நவராத்திரியின் பத்தாவது நாளில் வருகிறது (புகைப்படம்:PTI)

5 /5

டெல்லியில் தசரா டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த தசரா கொண்டாட்டத்தில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருடன் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசுத் துணைத் தலைவருக்கு ராம்லீலா அமைப்பாளர்களால் சூலாயுதம் வழங்கப்பட்டது. அமைதியின் சின்னமான வெள்ளைப் புறாக்களையும் அவர் விடுவித்தார். அதன்பிறகு, அவர் ராவண தகனைக் குறிக்கும் வகையில் அடையாளமாக அம்பு எய்தினார். (புகைப்படம்: ANI)