புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2023 ஆம் ஆண்டிலும் பல கிரகங்களின் சஞ்சாரம் செய்து, ராசிகளையும் மாற்றும். புத்தாண்டில், சனி, ராகு-கேது மற்றும் குரு ஆகியவற்றின் ராசி மாற்றம் முக்கியமானது. புத்தாண்டில், ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு தனது ராசியான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். அவரது ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், குரு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார்.
குரு மேஷ ராசியில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் நல்ல செய்தி தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூக கௌரவம் உயரும். நீண்ட நாட்களாக நிறைவேத விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி ராசிக்காரர்களும் குருவின் சஞ்சாரத்தால் ஆதாயம் பெறுவார்கள். புத்தாண்டில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாழன் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தருவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடிவடையும். புதிய வருமானம் கிடைத்து பொருளாதார நிலை மேம்படும். நினைத்தெல்லாம் நடக்கும்.
குரு மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு பிரவேசித்தாலும், மீன ராசியினருக்கு நிறைய பலன்களை தருவார். அவர்களின் சஞ்சாரத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறுவதன் மூலம் லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)