Health Benefits of Walnut Milk: ஆரோக்கியமாக இருக்க உலர் பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் வாதுமை பருப்பு எனப்படும் வால்நட் எக்கச்சக்க நன்மைகளை அள்ளி வழங்கும்.
சிலருக்கு பால் அலர்ஜியாக இருக்கலாம். அல்லது பால் பிடிக்காமல் இருக்கலாம். லாக்டோ சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு பால் அருந்துவதால் பிரச்சனைகள் உண்டாகலாம். இதற்கு வாதுமை பருப்பு பால் சிறந்த மாற்று உணவாக இருக்கும்.
மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும் உலர் பழங்களில் வாதுமை பருப்பு முதலிடம் வகிக்கிறது. குழந்தை பருவத்தில் இருந்தே வாதுமை பருப்பு அல்லது கோதுமை பருப்பு பால் அருந்தும் வழக்கம் இருந்தால் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
வாதுமை பருப்பு பாலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதோடு குறைந்த கிளைசிமி குறியீடு கொண்டது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம் எனலாம்.
வாதுமை பருப்பில் இதய ஆரோக்கியத்தை தடுக்கும் பல கூறுகள் காணப்படுகின்றன. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் சிறந்ததாகும்.
வாதுமை பருப்பு பால் சாதாரண பாலை விட மிகச்சிறந்தது. இது எலும்புகளை வலுவாக்குவதோடு மூட்டு வலியையும் பெரிதளவு குறைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம்.
வாதுமை பருப்பு பால், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. மேலும் புற்றுநோய் செல்கள் வளராவிடாமல் தடுக்கிறது. எனவே புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோய் இருப்பவர்களும் அதனை கட்டுப்படுத்த இதனை அருந்துவதை வழக்கமாக கொள்ளலாம்.
செரிமானம் சிறப்பாக இருந்தாலே நோய்கள் அண்டாமல் இருக்கும். அமைப்பை மேம்படுத்துவதில் வாதுமை பருப்பு பால் பெரிதும் உதவும். மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாதுமை பருப்பு பால் சிறந்த பலன் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.