நாம் சாப்பிடும் உணவு தான் நமது சருமத்திற்கு கூடுதல் பொழிவை தருகிறது. காலையில் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்கு இவை தேர்வை தருகின்றன. மேலும் இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.
சரும பராமரிப்பிற்கு தயிர் அதிகம் உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பல தோல் பராமரிப்பு பொருட்களில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.
தயிரில் துத்தநாகம் முதல் வைட்டமின்கள் பி2, பி5 என பல்வேறு சத்துக்கள் உள்ளது. இவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சரும செல்களை பாதுகாக்கிறது.
குயினோவா என்பது அமரந்த் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இவை சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
சருமம் பளபளப்பாக இருக்க நீரேற்றமாக இருப்பது முக்கியம். எனவே அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட வெள்ளரிக்காய் பழத்தை சாப்பிடுவது நல்லது. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
சிப்பிகளில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி முதல் சரும ஆரோக்கியம் வரை பலவற்றிற்கு உதவுகிறது. துத்தநாகம் சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் காயத்தை குணப்படுத்துகிறது.