Today Rasipalan: இன்று டிசம்பர் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். தாய்மாமன் வழியில் அலைச்சல் உண்டாகும். வழக்குப் பணிகளில் இழுபறியான சூழல் காணப்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான விஷயங்களை பொறுமையுடன் கையாளவும். எதிர்ப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் அஸ்வினி : தாமதம் ஏற்படும். பரணி : அலைச்சல் உண்டாகும். கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடி வரும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் கிருத்திகை : மாற்றம் உண்டாகும். ரோகிணி : முடிவுகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : எண்ணங்கள் கைகூடும்.
பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு மூலம் ஆதாயம் அடைவீர்கள். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். திருவாதிரை : உதவிகள் சாதகமாகும். புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து விற்பனையில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதாரம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அச்சம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : இழுபறிகள் மறையும். பூசம் : நெருக்கடிகள் குறையும். ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். நம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம்ரோஸ் நிறம் மகம் : மேன்மை ஏற்படும். பூரம் : சோர்வுகள் குறையும். உத்திரம் : பொறுப்புகள் கிடைக்கும்.
மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். சிறுதூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம் உத்திரம் : புரிதல்கள் மேம்படும். அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும். சித்திரை : நம்பிக்கை உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கவலைகள் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் சித்திரை : வேறுபாடுகள் குறையும். சுவாதி : ஆதரவு கிடைக்கும். விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்கால தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். செல்வச் சேர்க்கை தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம் விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும். அனுஷம் : சோர்வுகள் உண்டாகும். கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் மூலம் : கவனம் வேண்டும். பூராடம் : சந்திப்புகள் ஏற்படும். உத்திராடம் : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். கணுக்கால் வலிகள் குறையும். வெளியூர் பயணம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சகோதரிகள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் உத்திராடம் : ஆதாயம் ஏற்படும். திருவோணம் : அமைதி உண்டாகும். அவிட்டம் : சுபமான நாள்.
மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள். வியாபார அபிவிருத்தி சார்ந்த உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும். சதயம் : சிந்தனைகள் மேம்படும். பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் தெளிவுகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.