Weight Loss Tips: உடல் பருமன் பெண்களை அதிகமாக ஆட்கொள்கிறது. அதுவும், 40 வயதை கடந்த பெண்களுக்கு உடல் எடை விரைவாக அதிகரித்து விடுகிறது. அதன் பின்னர் உடல் எடையை குறைப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
Weight Loss Tips: 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடல் எடையை எப்படி குறைப்பது? இதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட வயதில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வித மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இவர்கள் உடல் எடையை குறைக்க சில சிறப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கலோரிகள் குறைவாகவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ள பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் தொப்பை குறைவது மட்டுமின்றி பல நோய்களும் குணமாகும்.
40 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைப்பதும் தொப்பையை (Belly Fat) குறைப்பதும் மிகவும் கடினம். ஆகையால் உணவில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் கலோரி அதிகமாக இருப்பதால் இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கிறது. ஆகையால் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம் பதற்றம் ஆகியவை அடிவயிற்றில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும். இது தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. மன அழுத்தத்தை சமாளிக்க தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியும் செய்யலாம்.
குறைவான தூக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது மிக அவசியமாகும். தூக்கமின்மை தொப்பை கொழுப்பை அதிகரித்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
40 வயதுக்கு மேலான பெண்கள் கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொப்பையை குறைப்பதிலும், தசைகளை வளர்ப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை