உடல் எடையை குறைக்க சூப்பரான வழி: காலை உணவில் இதையெல்லாம் சேர்த்தால் போதும்

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால் மக்கள் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க பல விதங்களில் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. 

உடற்பயிற்சி செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் மற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். உணவை கட்டுப்படுத்துவது அதில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அதில் முக்கியமானது காலை உணவு. இதை கவனத்தில் கொண்டால், குறுகிய காலத்தில் பல கிலோ எடையைக் குறைக்கலாம்.

1 /4

காலை உணவை தவிர்க்கும் தவறை எப்போதும் செய்யாதீர்கள். காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க எளிதான வழி என்று நீங்கள் நினைத்தால், அது ஒரு பெரிய தவறாகும். காலை உணவு உண்ணாமல் இருப்பதால், நாம் நமது பசியைத் தடுக்க பலவித ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இது எடையை குறைப்பதற்கு பதிலாக எடையை அதிகரிக்கும் பணியை செய்கிறது.   

2 /4

அதிகப் புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு  நிறைவாக வைத்திருக்கும். இது அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கிறது. மேலும் தேவையற்ற உணவு மற்றும் அதிகப்படியான உணவையும் தவிர்க்கிறது. எடையை கட்டுக்குள் வைத்திருப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.  

3 /4

முட்டையில் நல்ல அளவு புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் இதில் மிகக் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. எனவே நீங்கள் அசைவம் சாப்பிடுபவர் என்றால் இதை கண்டிப்பாக காலை உணவில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால், வயிறு நிரம்பி, எடை கட்டுக்குள் இருக்கும். வேகவைத்த முட்டை ஆரோக்கியமான மற்றும் எளிதான உணவாக கருதப்படுகின்றது. 

4 /4

புரதத்திற்குப் பிறகு, காலை உணவில் இருக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம் நார்ச்சத்து ஆகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை நிரப்பி, செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மிக முக்கியமாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடை மற்றும் நீரிழிவு இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பழங்கள் தவிர, முழு தானியங்களிலும் அதிக நார்ச்சத்து உள்ளது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)