BeetRoot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது.
பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக உள்ளது, அதே சமயம் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதே போல நீண்ட கால இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கலாம்.
உடல் சேர்வை போக்க பீட்ரூட் உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்மிற்கு செல்வோர் சில மணிநேரங்களுக்கு முன் பீட்ரூட் சாப்பிடுவது செயல்திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பீட்ரூட் இதய நோய், மூட்டுவலி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை குறைக்கும் என்று கூறப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும் இதில் உள்ள சில சேர்மங்கள், பீடைன் மற்றும் பீட்டாலைன்கள் உட்பட, புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
பீட்ரூட்டில் குறைந்த கலோரிகள் மற்றும் தண்ணீர், நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளதால் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.