இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?

அசைவ உணவை பலர் விரும்பி சாப்பிட்டு வந்தாலும் இந்தியாவில் உள்ள நகரத்தில் இந்த உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த நகரம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 

1 /6

குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வதும், சாப்பிடுவதும் குற்றம் ஆகும்.  

2 /6

அசைவ உணவுகளை தடை செய்துள்ள உலகின் முதல் நகரம் பாலிதானா ஆகும். அந்த பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை மூட கூறி 2014ல் துறவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

3 /6

பிறகு ஜெயின் சமூகத்தினரின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் அசைவ உணவுகளுக்கு தடையை அறிவித்தது. யாராவது அசைவம் சாப்பிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.  

4 /6

அரசின் இந்த முடிவு ஜைன மதத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகின்றனர்.   

5 /6

அசைவ உணவின் தடைக்கு பிறகு அந்த பகுதியில் பல சைவ உணவகங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு வித விதமான சைவ உணவுகள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.   

6 /6

பாலிதானா நகரம் ஒரு முக்கிய ஜெயின் புனித தலமாகும். அசைவ உணவின் தடை அதன் புனிதத்தை பாதுகாக்கிறது. இருப்பினும் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.