Pregnacny Care Foods: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருவுற்ற பெண் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கருவுற்ற பெண்கள் உண்ண வேண்டிய உணவுகளுக்கு என்று ஒரு லிஸ்ட் இருந்தால், உண்ணக்கூடாதவற்றிறகான பட்டியலும் நீளமாக இருக்கிறது
கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த உணவுகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.
கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த காலகட்டத்தில், கருப்பையில் வளரும் கருவின் உடல் அமைப்பு மற்றும் உறுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாக கூட சாப்பிடக்கூடாத சில விஷயங்கள் உள்ளன, ஏனெனில் அவை கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும்.
பப்பாளி சாதாரண மக்களுக்கு ஒரு அற்புதமான பழம், ஆனால் பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாகக் கூட பப்பாளியை உட்கொள்ளக் கூடாது
கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதனால்தான் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அன்னாசி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம், கருப்பையை சுருங்கச் செய்யும். இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
கர்ப்பத்தின் தொடக்கத்தில் உங்கள் உணவில் பச்சை முட்டையை சேர்த்துக் கொள்ள்வேண்டாம். சால்மோனெல்லா பாக்டீரியா பச்சை முட்டைகளில் காணப்படுகிறது. இது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மது, புகை, இரண்டுமே இத்தகைய போதைப் பொருள்கள், யாராவது ஒருமுறை அதற்கு அடிமையானால், அவர்களால் எளிதில் அதிலிருந்து விடுபட முடியாது. கர்ப்ப காலத்தில் அவற்றை உட்கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது.
கருவுற்ற பெண்கள் ஆரோக்கியமான உணவு உண்டால் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்