உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, தனிமைப்படுத்தலின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்தது. தற்போது சமூகத்திலிருந்து விலகி தொலைதூரத்தில் மக்கள் வசிக்க இங்கிலாந்து (England Remote House) விரும்புகின்றனர்.
தனியாக இருக்கும் வீடுகளை வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் மிகவும் தனிமையான வீட்டின் புகைப்படங்களும் வைரலாகின்றன.
READ ALSO | வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன..!!
1500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்கிடாவ் ஹவுஸ் மக்களை ஈர்க்கும் மையமாக உள்ளது.
இந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமானால் 4 கிமீ தூரம் வரை பயணிக்க வேண்டிய அளவுக்கு இந்த வீடு வெறிச்சோடி காணப்படுகிறது. அதாவது இந்த வீட்டைச் சுற்றி நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு கடைகள் கிடையாது. இந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரரோ எதிர்வீட்டுக்காரரோ இல்லை.
இந்த வீட்டில் மின்சாரமோ அல்லது எரிவாயு வசதியோ இல்லை என்ற நிலையில், இணையதளம், இண்டன்நெட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமையலுக்கு மர அடுப்பு தான், மின்சாரத்திற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த வீட்டின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 200 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை வாங்க 15 கோடி ரூபாய் வரை (Skiddaw House England Sale) கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.