+2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி தொடக்கம்!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.

Last Updated : Apr 8, 2018, 11:25 AM IST
+2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி தொடக்கம்!! title=

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.

முதல் நாளில் நடைபெற்ற மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாட தேர்வு, குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து முடிந்தன. கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல் உட்பட, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பாட வாரியாக தேர்வுகள் நடந்தன. பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள் எளிதாக இருந்தன.

சென்னை மாநகரில் மட்டும் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து விட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட விடைத்தாள் மையத்திற்கு கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வருகிற 11-ம் தேதி முதல் முதல் நிலை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள் திருத்துகின்றனர். பின்னர் பிற ஆசிரியர்களும் அதன் பின்பு இதில் இணைந்து கொள்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு முதலிலேயே பிற பாடங்களுக்கு தாள்களை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதலில் மொழி பாட தாள்கள் தான் திருத்தப்பட்டது. இந்நிலையில் மாலை முதல் பிளஸ்டூ விடைத்தாள் கட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மையங்களுக்கு வந்து சேர்ந்தது. 

நெல்லை மாவட்டத்தில் பாளை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்காசி வேலாயுத நாடார் மெட்ரிக் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் சொந்த மாவட்டத்தை தவிர வேறு பகுதி மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் தான் திருத்தப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறைகேட்டை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ஆம் தேதி தொடங்கிய பின் ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

Trending News