பிரபல Radi Jockey மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்!

கேரளாவின் பிரபல ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷ், இன்று காலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Mar 27, 2018, 10:41 AM IST
பிரபல Radi Jockey மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்! title=

கேரளாவின் பிரபல ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷ், இன்று காலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்!

கேரளாவின் திருவணந்தப்புரத்தில் நடைப்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பலியான ராஜேஷ்(36) பிரபல வானொலி ஒன்றில் ரேடியோ ஜாக்கி-யாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சுயமாக ஓர் ரெக்கார்டிங் (Metro  Studio) ஸ்டூடியோ ஒன்றினை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், இன்று காலை சுமார் 2 மணியளவில் தனது ஸ்டுடியோவில் தன் நண்பருடன் இருக்கையில் மர்ம நபர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரையும் அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News