#Karnataka: மே-1 முதல் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்!

Last Updated : Apr 25, 2018, 08:26 AM IST
#Karnataka: மே-1 முதல் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி!! title=

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

எனவே, ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் துவக்குகிறார். 

அதன்படி, மே மாதம் 1-ந் தேதி பல்லாரி, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 

இதையடுத்து மே 3 முதல் 7 தேதிகளில் சாம்ராஜ்நகர், உடுப்பி, கலபுரகி, உப்பள்ளி, சிவமொக்கா, துமகூரு, பெங்களுரு ஆகிய இடங்களில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடையே பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். 

பிரதமர் மோடி மட்டுமின்றி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் முகாமிட்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

ஆகையால், பிரதமர் மோடி மே 10-ந் தேதி வரை 20 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக பா.ஜனதா தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending News