நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்..! அப்போது அவர்,, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால் மனமுடைந்த விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். நீட் தேர்வால் தொடரும் உயிர்ப்பலிகளை தடுத்து நிறுத்தப்பட நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார்.