நம்புங்க இது புளூட்டோ: பிரபஞ்ச கோள் அழகிப் போட்டியில் ஜெயித்து ஜொலிக்கும் புளூட்டோ

Colourful Planet Pluto: நமது சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ள கோளான புளூட்டோவின் வண்ணமயமான புகைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2022, 12:26 PM IST
  • ரம்மியமான நிறங்களில் நிரம்பிய புளூட்டோ
  • பனியில் உறைந்தாலும் புளூட்டோவின் அழகு
  • புளூட்டோவின் உறைய வைக்கும் பேரழகு
நம்புங்க இது புளூட்டோ: பிரபஞ்ச கோள் அழகிப் போட்டியில் ஜெயித்து ஜொலிக்கும் புளூட்டோ title=

புளூட்டோ நமது சூரிய குடும்பத்தில் தொலைதூர விண்வெளி அமைப்பாக இருந்தாலும், ஆனால் அவ்வப்போது வழங்கும் ஆச்சரியங்களுக்கு அளவேயில்ல்லை.  நமது சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ள கோளான புளூட்டோவின் வண்ணமயமான புகைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஒரு கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தாலும் புளூட்டோ நம்மை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்தவில்லை. உறைந்த நிலப்பரப்பின் படங்கள் வண்ணமயமான நிறங்களில் வியப்பை ஏற்படுத்தி பிரபஞ்சத்தின் மர்மங்களினால் நம்மை திகைக்க வைக்கிறது.

நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் 2015 இல் புளூட்டோவைக் கடந்ததால், பனிக்கட்டியாக உறைந்திருக்கும் புளூட்டோபற்றிய கூடுதல் தகவல்களையும், நுணுக்கமான செய்திகளையும் நியூ ஹொரைசன்ஸ் தொடர்ந்து கொடுத்துவருகிறது. நாசா புளூட்டோவின் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதுமே ஆயிரக்கணக்கானோரால் விரும்பப்பட்டது. தற்போது, சமூக ஊடகங்களில் அதிகம் தேடப்படும் பொருளாகவும் புளூட்டோ மாறிவிட்டது.

நாசா மற்றொரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது, இது வழக்கம் போல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தில், புளூட்டோ ரம்மியமான நிறங்களில் நிரம்பியுள்ளது மற்றும் ஒரு விண்வெளியில் அது தனித்துவமாகத் தெரிகிறது. அந்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்

"வானவில் எங்கு முடிவடைகிறது? புளூட்டோ உண்மையில் ஒரு சைகடெலிக் கலவரம் அல்ல - இந்த மொழிபெயர்க்கப்பட்ட வண்ணப் படம் நியூ ஹொரைசன்ஸ் விஞ்ஞானிகளால் கிரகத்தின் தனித்துவமான பகுதிகளுக்கு இடையிலான பல நுட்பமான வண்ண வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது" என்று புகைப்படத்தை பகிர்ந்த நாசா, அத்துடன் எழுதப்பட்ட பதிவில் விளக்கம் கொடுத்துள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

"புளூட்டோ ஒரு சிக்கலான, மாறுபட்ட மேற்பரப்புடன் யூரோபாவை நினைவூட்டும் மலைகள், செதுக்கப்பட்ட பள்ளத்தாக்குகளின் நெட்வொர்க்குகள், புதிய, மென்மையான பனிக்கட்டி சமவெளிகளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பழைய, அதிக பள்ளங்கள் மற்றும் காற்று வீசும் குன்றுகளாக இருக்கலாம்" என்று நாசா மேலும் விளக்கமாக தெரிவித்துள்ளது.

நியூ ஹொரைசன்ஸ் 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் நால் விண்ணில் ஏவப்பட்டது. 2015ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் புளூட்டோ மற்றும் அதன் நிலவுகள் பற்றிய ஆறு மாத கால பறக்கும் ஆய்வை நடத்திய இந்த விண்கலம், தொலைதூர சூரிய மண்டலத்தை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது, கைபர் பெல்ட்டை நோக்கி செல்லும் நியூ ஹொரைசன்ஸ் மேலும் பல மர்மமான ரகசியங்களை பூமி கிரகத்தில் வசிக்கும் மக்களுக்கு கொடுக்கும்.

மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News