இறந்த குரங்கை உயிர்பித்த குரங்கு - வைரல் வீடியோ

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை, மற்றொரு குரங்கு முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2021, 01:53 PM IST
இறந்த குரங்கை உயிர்பித்த குரங்கு - வைரல் வீடியோ title=

 

விபத்து ஏற்பட்டவுடன் சரியான முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகம். ஏனென்றால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை முதலுதவி. நாட்டில் உள்ள அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய மருத்துவமுறையும்கூட. இதை கற்று வைத்துக்கொண்டால் சாலையில் செல்லும்போது அல்லது ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கியவரின் அருகில் இருக்கும்போது, அவரை காப்பாற்றிவிடலாம்.

ALSO READ | Viral Video: கேமராவில் சிக்கிய நாகப்பாம்பு Vs கீறி சண்டை

ஆபத்து காலத்தில் சக மனிதர்களுக்கு இன்னொருவர் முதலுதவி செய்து பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், விபத்தில் சிக்கிய விலங்கு ஒன்றை சக விலங்கு முதலுதவி செய்து காப்பாற்றியதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. அப்படியான ஒரு அதிசய நிகழ்வு, ரயில்வே நிலையம் ஒன்றில் நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி நொடிப்பொழுதில் மயங்கிவிடுகிறது.

இதனை உடனடியாக கவனித்த மற்றொரு குரங்கு (Monkey video), விபத்தில் சிக்கிய குரங்கை மின்சாரம் பாய்ந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதுடன், அதற்கு உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. பல்வேறு வழிகளில் முயற்சிக்கும் அந்த குரங்கு, எப்படியாவது மயங்கிய நிலையில் இருக்கும் குரங்கை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற முனைப்பை கடைசிவரை கைவிடவில்லை. தண்ணீருக்குள் அமுக்கியும், உடலை அங்கும், இங்கும் ஆட்டியும் அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. ஒருவழியாக குரங்கு உயிர்பெற்று விடுகிறது.

 

ரயில் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர், குரங்கின் இந்த செயலைக் கண்டு வாயடைத்துப்போனார்கள். மேலும், அங்கு சுற்றியிருந்து வேடிக்கை பார்த்தவர்கள் பலர் படம்பிடித்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். டிவிட்டரில் பதிவிட்டப்பட்ட இந்த வீடியோ, சோஷியல் மீடியாவின் அனைத்து தளங்களிலும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு டிவிட்டரில் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர், சக மனிதர்கள் விபத்தில் சிக்கினாலே யாரும் உதவமாட்டார்கள், விலங்கு என்றால் சொல்லவா? வேண்டும். குரங்கு என்னை இந்த விஷயத்தில் வியக்க வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

ALSO READ | குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News