#சிங்கப்பெண்கள்: வட துருவத்தின் மீது பறந்து சாதனை படைக்கவுள்ளது Air India-வின் Women Pilot team

வட துருவத்தின் மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்த ஒரு விஷயம் என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவமும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 9, 2021, 02:38 PM IST
  • ஏர் இந்தியாவின் அனைத்து மகளிர் பைலட் குழுவின் வரலாற்று பயணம் இன்று துவக்கம்.
  • சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வட துருவம் வழியாக விமானம் பெங்களூருக்கு வரும்.
  • அனைத்து மகளிர் குழுவிற்கு சோயா தலைமை வகிப்பார்.
#சிங்கப்பெண்கள்: வட துருவத்தின் மீது பறந்து சாதனை படைக்கவுள்ளது Air India-வின் Women Pilot team

புதுடெல்லி: கேப்டன் சோயா அகர்வால் தலைமையில், தேசிய விமான சேவையான ஏர் இந்தியாவின் அனைத்து மகளிர் பைலட் குழு, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை வட துருவத்தின் மீது பறந்து சுமார் 16,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வரலாற்றை உருவாக்க உள்ளது. ஏர் இந்தியா விமானிகள் இதற்கு முன்னர் துருவப் பாதையில் பறந்திருந்தாலும், முதல் முறையாக ஒரு பெண் விமானிகளின் அணி வட துருவத்தை கடந்து செல்லப் போகிறார்கள்.

AI 176 என்ற விமானம் ஜனவரி 9 ஆம் தேதி 2030 மணிக்கு (உள்ளூர் நேரம்) சான் பிரான்சிஸ்கோவிலிருந்து (San Francisco) புறப்பட்டு ஜனவரி 11 ஆம் தேதி 0345 மணிக்கு (உள்ளூர் நேரம்) பெங்களூருக்கு வந்து சேரும். ஏர் இந்தியா அல்லது இந்தியாவின் எந்தவொரு விமான நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்படும், உலகின் மிக நீண்ட வணிக விமான பயணமாகும் இது என்று கூறப்படுகிறது.

வட துருவத்தின் மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்த ஒரு விஷயம் என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவமும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர். "வட துருவத்தின் வழியாக பறப்பது மிகவும் சவாலான விஷயம். பொதுவாக விமான நிறுவனங்கள் தங்கள் மிகச் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த விமானிகளையே இந்த வழியில் அனுப்புகின்றன. இந்த முறை சான் ஃபிரான்சிகோவிலிருந்து பெங்களூருவுக்கு துருவ பாதை வழியாக பயணம் செய்வதற்கான பொறுப்பை ஒரு பெண் கேப்டனுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது” என்று ஏர் இந்தியா (Air India) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோயா என்ற அந்த பெண் பைலட்டுக்கு 8,000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணி நேர அனுபவம் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி என்ற சாதனையை அவர் செய்தார். வட துருவம் வழியாக அவர் மேற்கொள்ளப் போகும் இந்த பயணம் அவரது சாதனைகளில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும்.

ALSO READ: Covid பயத்தால் மொத்த டிக்கெடையும் வாங்கி ஒத்தையா விமானத்தில் பயணித்த கோடீஸ்வரர்!

தனது அனுபவத்தை விவரித்த அவர், ”உலகில் பெரும்பாலான மக்களுக்கு தங்கள் வாழ்நாளில் வட துருவத்தையோ (North Pole) அல்லது அதன் வரைபடத்தையோ கூட பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் உண்மையிலேயே பாக்கியம் செய்துள்ளேன், அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். போயிங் 777 தொடக்க SFO-BLR-க்கு தலைமை வகிக்கும் இந்த வாய்ப்பு ஒரு பொன்னான வாய்ப்பாகும். இது வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமான பயணங்களில் ஒன்றாகும்.” என்றார்.

“கேப்டன்கள் தன்மய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் அடங்கிய அனுபவம் வாய்ந்த பெண்கள் அணியை என்னுடன் வைத்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து மகளிர் விமானிகள் (Pilot) அணி வட துருவத்தின் மீது பறந்து செல்வது இது முதன் முறையாகும். இது ஒரு வித வரலாற்று நிகழ்வு என்றுகூட சொல்லலாம். எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது கனவு நிஜமாவதைப் போன்ற ஒரு தருணமாகும்” என்று சோயா ANI இடம் கூறினார்.

ALSO READ: இந்தியாவின் தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்கிறது : பிரதமர் மோடி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News