See wedding pic: காதலன் பவ்னிந்தர் சிங்கை ரகசிய திருமணம் செய்த அமலா பால்...

அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவ்னிந்தர் சிங்!!

Last Updated : Mar 21, 2020, 07:58 AM IST
See wedding pic: காதலன் பவ்னிந்தர் சிங்கை ரகசிய திருமணம் செய்த அமலா பால்...  title=

அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவ்னிந்தர் சிங்!!

தமிழ் சினிமா 'தலைவா' படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து, அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட "அது என் பெர்சனல் விஷயம்" என்று மட்டுமே பதிலளித்து வந்தார்.

இதனிடையே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன் 'Wedding Throwback' என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது. ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாரம்பரிய திருமண உடையில் திருமண செய்து கொண்ட தம்பதியினரின் படங்கள் இணையத்தில் வைரலாகியதை அடுத்து, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த செய்தியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமலா பால் பவ்னிந்தர் சிங்குடன் நேரடி உறவில் ஈடுபட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. 

Trending News