குழந்தை (ம) வருங்கால கணவருடனான புகைப்படத்தை பதிவிட்ட எமி..!

தனது குழந்தை மற்றும் வருங்கால கணவருடனான முதல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

Updated: Sep 25, 2019, 11:03 AM IST
குழந்தை (ம) வருங்கால கணவருடனான புகைப்படத்தை பதிவிட்ட எமி..!

தனது குழந்தை மற்றும் வருங்கால கணவருடனான முதல் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், லண்டனுக்கே மீண்டும் சென்ற அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இதற்கிடையே  எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும். தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து இருவருக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய  குழந்தை மற்றும் வருங்கால கணவருடனான முதல் புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எமிஜாக்சன். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Our Angel, welcome to the world Andreas

A post shared by Amy Jackson (@iamamyjackson) on