பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...

முன்னாள் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

Last Updated : Oct 29, 2020, 05:41 PM IST
பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...  title=

Losliya tying the knot | முன்னாள் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்தார். அவர் தனது துருதுருப்பான செயலால் ரசிகர்களைக் கவர்ந்தார், மேலும் இது கோலிவுட்டில் நடிகைக்கான வாயிலைத் திறந்தது. 

இதற்கிடையில் லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக இருந்த நடிகர் கவின் என்பவரை அவர் காதலித்ததாகக் கூறப்பட்டதால் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ALSO READ | ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

தகவல்களின்படி, லாஸ்லியா பெற்றோர் அவரது திருமணத்திற்கு முடிவு செய்துள்ளனர், மேலும் அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கனடாவில் தங்கள் நண்பரின் மகனுடன் திருமணத்தைப் பற்றி அவர்கள் பேசுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகை தனது திருமண அறிக்கையை தனது சமூக ஊடக இடுகை அல்லது நேர்காணல்களால் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவல் லாஸ்லியாவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கைக் கொண்ட 'Friendship' மூலம் முன்னணி நடிகையாக லாஸ்லியா அறிமுகமாகிறார். ஜே.எம்.ராஜா சரவணனுடன் ஒரு க்ரைம் ஆக்ஷன் த்ரில்லருக்காகவும் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார், மேலும் இதில் கே கே பூரனேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

ALSO READ | பிக்பாஸ் சர்ச்சை: மறைக்கப்பட்ட விஷயங்களை போட்டுடைத்த மதுமிதா!!

Trending News