விரைவில் வெளியீடு தேதி தெரிவிக்கப்படும் -பிகில் படக்குழுவினர்!

பிகில் படத்திற்கான தணிக்கை முறைமை முடிந்ததாகவும், விரைவில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Updated: Oct 16, 2019, 12:00 PM IST
விரைவில் வெளியீடு தேதி தெரிவிக்கப்படும் -பிகில் படக்குழுவினர்!
Screengrab

பிகில் படத்திற்கான தணிக்கை முறைமை முடிந்ததாகவும், விரைவில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று "அட்லி" இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "பிகில்". இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தணிக்கை முறைமை முடிந்ததாகவும், விரைவில் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக இத்திரைப்படத்தின் போஸ்டர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது. இதனைத்தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக "பிகில்" படக்குழு அக்டோபர் 12-ஆம் தேதி "பிகில்" படத்தின் ட்ரைலரை வெளியிட்டது. வழக்கம் போல் விஜயின் இந்த திரைப்படும் ட்ரைலர் பார்வையில் பல சாதனைகள் படைத்தது.

அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இத்திரைப்படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக்,  பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.