Viral News: பறவைகளின் 11 மாடி ‘அபார்மெண்ட்’; நீச்சல் குளமும் அதில் உண்டு..!!

மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பறவைக்கான குடியிருப்பு கட்டப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 03:59 PM IST
Viral News: பறவைகளின் 11 மாடி ‘அபார்மெண்ட்’; நீச்சல் குளமும் அதில் உண்டு..!! title=

பெருகிவரும் மக்கள்தொகையால், பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், உயரமான கட்டிடங்களும்  பொதுவான காட்சியாக மாறிப் போன நிலை தான் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறி இரண்டு அல்லது மூன்று BHK குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். 

இப்போது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதைக் கேட்டால் நமக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா.... ஆம், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில்  பறவைகளுக்கான குடியிருப்பு ஒன்று காணப்பட்டது. பறவைகளுக்காக  கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், பறவைகள் உண்ண உறங்க வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் உள்ளே இருக்கும் நீச்சல் குளத்தில் குளிக்கவும் முடியும்.

11 மாடி ரெடிமேட் அபார்ட்மெண்ட்

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் இப்படி ஒரு தனித்துவமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வைரலாகியுள்ளன. இந்த பறவையின் அபார்ட்மெண்ட் 11 மாடிகள் கொண்டது. எல்லா வசதிகளும் அதில் உள்ளன. இதில் பறவைகள் குளிப்பதற்கு நீச்சல் குளமும் தயார் செய்யப்பட்டுள்ளதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

மேலும் படிக்க | ஓடும் ஆற்றில் மீன் பிடிக்கும் கரடிகள் - வைரல் வீடியோ 

இந்த குடியிருப்பில் சுமார் 1100 பறவைகள் வாழலாம். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஸ்ரீதுன்கர்கர் என்ற இடத்தில் உள்ள டோலியாசர் கிராமத்தில் இந்த சிறப்பு அடுக்குமாடி குடியிருப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்

இந்த குடியிருப்பில் பறவைகள் வந்து கூடு கட்டலாம். மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை தயார் செய்ய சுமார் ரூ.5 லட்சம் செலவானது என கூறப்படுகிறது. எந்தப் பக்கத்திலிருந்தும் பறவை வந்து குடியேறும் வகையில், குவிமாடம் வடிவில் இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல பறவைகள் ஏற்கனவே வந்து வாழத் தொடங்கியுள்ளன. 

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News