புதுடில்லி: இந்தியாவின் "இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் (Sardar Vallabhbhai Patel) இன்று 114 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடி வருகிறது. அதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா (Priyanka Gandhi Vadra) தனது சமூக வலைதளத்தில் "சுயம்சேவக் சங்கத்தை (Rashtriya Swayamsevak Sangh) கடுமையாக எதிர்த்தது ட்வீட் (Tweet) செய்துள்ளார். தனது ஒரு ட்வீட்டில், ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சர்தார் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா ட்வீட் செய்துள்ளார். அவர், "சர்தார் படேல் தன்னை காங்கிரஸின் சித்தாந்தத்திற்கு அர்ப்பணித்த காங்கிரஸின் விசுவாசமான தலைவர். ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த அவர், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக கடுமையாக இருந்தார். ஆனால் பாஜக இன்று இன்று, பாஜக அவரை தத்தெடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த முயற்சிப்பதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அவர் மேலும் செய்துள்ள ட்வீட்டில், "ஏனெனில் பாஜகவின் இந்த நடவடிக்கை இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகிறது....
1. அவர்களுக்கு சொந்தமாக ஒரு பெரிய சுதந்திர போராட்ட வீரர் இல்லை. கிட்டத்தட்ட அனைவருமே காங்கிரசுடன் தொடர்புடையவர்கள்.
2. சர்தார் படேலைப் போன்ற பெரிய மனிதர்களுக்கு முன்னால் ஒரு நாள் எதிரிகள் கூட தலைவணங்க வேண்டும்" என்பதைக் காட்டுகிறது என ட்வீட் செய்துள்ளார்.
அக்டோபர் 2014 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இந்த நாளில் நாட்டு மக்கள் "ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்" என்ற நோக்கத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் தினத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் உங்களுக்குச் சொல்கிறோம்.
சர்தார் வல்லபாய் படேலின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தின் கெவாடியாவில் உள்ள அயர்ன் மேன் சர்தார் வல்லபாய் படேலின் சிலையில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, இன்றும் சர்தார் படேலின் ஒரு வார்த்தைக்கு முக்கியத்துவம் உண்டு என்று கூறினார். இந்த சிலை ஒற்றுமை, ஆற்றல் மற்றும் அமைதியை வழங்குகிறது. இந்த சிலை ஒற்றுமையின் சின்னமாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது எங்கள் பெருமை, அடையாளம் என்றார்.