சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த ஷரத் கெல்கர்!

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர்! 

Updated: Aug 14, 2018, 12:37 PM IST
சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த ஷரத் கெல்கர்!
File Pic

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர்! 

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பினை துவங்கியுள்ளார். தற்போது இயக்குனர் 
பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ என்னும் திரைப்படத்தின் வேலைகளில் பிஸியா வளம் வரும் இவர், இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

ரவிகுமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார். சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ’24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 

மேலும், முக்கிய வேடங்களில் கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா, இஷா கோபிகர் ஆகியோர் நடிக்கின்றனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ‘ராம்லீலா’ எனும் ஹிந்தி பட புகழ் ஷரத் கெல்கர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘24AM’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது.