நாய் மற்றும் பாம்பின் சண்டை வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில், வீட்டுக்குள் புகுந்த 7 அடி பாம்புடன் அரை மணி நேரம் நாய் ஒன்று சண்டை போடுவதை காணலாம்.
மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்ல, கடைசியில் அங்கு யாரும் யூகிக்க முடியாத ஒரு விஷயம் நடந்துள்ளது. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்து நீங்களும் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.
மிர்சாபூரின் சில்ஹ் காவல் நிலையப் பகுதியின் திலதி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிராமத்தில் உமேஷ் என்ற விவசாயிக்கு வீடு உள்ளது. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். குடும்பத்தில் அனைவரும் அந்த நாயை ஜூலி என்று அன்புடன் அழைப்பார்கள். ஒரு நாள் உமேஷின் வீட்டுக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. பாம்பை பார்த்ததும் குடும்பத்தினர் அச்சம் அடைந்தனர்.
வீடியோவை இங்கே காண்க:
#UttarPradesh#Mirzapur#dogsnake fight
पालतू डॉग ने बचाई घरवालों की जान, सांप को पटक पटककर मारा. pic.twitter.com/1gwt4Hffdv— Sweta Gupta (@swetaguptag) November 5, 2022
பாம்பும் நாயும் மோதுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்
அப்போது அந்த வீட்டில் வசிக்கும் ஜூலி பாம்பை வாயைப் பிடித்து திறந்த வெளியில் கொண்டு வந்தார். இதையடுத்து பாம்புக்கும், ஜூலிக்கும் இடையே அரை மணி நேரம் சண்டை நடந்தது. இந்த போராட்டத்தை பார்த்து உமேஷின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ